திரங்கானுவில் VAPE விற்பனைக்குத் தடை!

top-news

ஏப்ரல் 25,

திரங்கானுவில் மின்சிகரெட்டுகள் சம்மந்தப்பட்ட எந்தவொரு பொருள்களையும் ஆகஸ்ட் 1 முதல் விற்பனை செய்யக்கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திரங்கானு மாநில வீட்டு வசதி சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Wan Sukairi Wan Abdullah இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். எதிர்வரும் மே 1 முதல் ஜூலை 31 வரையில் மின் சிகரெட்டுகள் விற்பனை செய்யும் வளாகங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் வளாக உரிமையாளர்கள் தானாக முன்வந்து வணிக உரிமத்தைத் திருத்தம் செய்யும்படியும் Datuk Wan Sukairi Wan Abdullah வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 1 முதல் வளாகங்களில் மின் சிகரெட்டுகளையோ மின்சிகரெட்டுக்கானச் சாதனங்களையோ விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வணிக உரிமத்தையும் ரத்து செய்வதாகவும் Datuk Wan Sukairi Wan Abdullah நினைவுருத்தினார். இது திரங்கானுவிற்குச் சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் இந்த தடையால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மாற்று வணிகத்திற்கான முன்முயற்சிகளைத் திரங்கானு மாநில அரசு வழங்கும் என்றும் Datuk Wan Sukairi Wan Abdullah உறுதியளித்தார்.

Kerajaan negeri Terengganu melarang penjualan vape dan peralatan berkaitan mulai 1 Ogos. Premis yang menjual produk ini perlu menghentikan operasi antara 1 Mei hingga 31 Julai. Pemilik premis diberi peluang ubah lesen atau berdepan tindakan tegas termasuk pembatalan lesen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *