ஒரே ஒரு சந்தையை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்ப்பீர் - அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6-

ஒரே ஒரு பெரிய சந்தையை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்ப்பதற்காக, புதிய வர்த்தகச் மலேசியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கை ஆசியான் அமைப்பு ரீதியில் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்வது தொடங்கப்பட்டு விட்டதாகவும் வளைகுடா நாடுகள், சீனா மற்றும் பிரிக்ஸ் அமைப்பின் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) முக்கியத் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், நிதி அமைச்சருமான அன்வார் கூறியுள்ளார்.

"பிரிக்ஸ் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் வர்த்தகப் பங்காளி களுடனான வர்த்தக நடவடிக்கை களை நாங்கள் அதிகரித்திருப்பதுடன்,புதிய வர்த்தக வாய்ப்புகளையும் தீவிரமாக திறந்துள்ளோம் இது பலனளிக்கவும் தொடங்கி விட்டது. உதாரணத்திற்கு, ஆசியான் நாடுகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி 4.2 விழுக்காடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 2.6 விழுக் காடாகவும் அதிகரித்திருக்கிறது.

"பாரம்பரியமற்ற சந்தைக்கான ஏற்றுமதி வளர்ச்சி கடந்த 2024 ஆம் ஆண்டில் உயர்ந்திருக்கிறது. எகிப்துக்கான ஏற்றுமதி 53.6 விழுக்காடாகவும், பாகிஸ்தானுக்கு 29 விழுக்காடாகவும் கம்போடியாவுக்கு 30.1 விழுக்காடாகவும் அதிகரித்திருப்பதும் அதில் அடங்கும்" என்று, அன்வார் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று. அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு தொடர்பிலான சிறப்புக் கூட்டத்தில் விளக்கமளித்தபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

PM Anwar Ibrahim berkata Malaysia kini giat meneroka pasaran baharu untuk kurangkan kebergantungan kepada satu pasaran besar. Eksport ke negara seperti Mesir, Pakistan dan Kemboja meningkat ketara, manakala kerjasama BRICS dan ASEAN diperluas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *