காரிலிருந்து தவறி விழுந்த பெண்ணை மொதிய லாரி! பெண் பலி!

top-news

மே 5,

சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் பின் கதவு திறந்து சாலையின் நடுவே விழுந்த பெண்ணை எதிரில் வந்த TANKER லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 39 வயது பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். நேற்று காலை 8.20 மணிக்கு போர்ட்டிக்சனில் உள்ள Jalan Lukut சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Port Dickson, மாவட்டக் காவல் ஆணையர் Maslan Udin தெரிவித்தார்.

இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து இந்து ஒரு விபத்து என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக Port Dickson, மாவட்டக் காவல் ஆணையர் Maslan Udin உறுதிப்படுத்தினார். சாலையின் நடுவே திடீரென விழுந்த பெண்ணை மோதாமல் லாரி ஓட்டுநர் விலகிச் செல்ல முயன்றும் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக Port Dickson, மாவட்டக் காவல் ஆணையர் Maslan Udin தெரிவித்தார். வாகனத்தைச் செலுத்திய உயிரிழந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் சம்பவத்தின் போது வாகனத்தில் 34 வயது கணவரும் 5 மாதக் குழந்தையும் முன் இருக்கையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang wanita berusia 39 tahun maut selepas terjatuh dari kereta dan digilis lori tangki di Jalan Lukut, Port Dickson. Polis mengesahkan kejadian sebagai kemalangan dan sedang menyiasat punca pintu belakang kenderaan terbuka secara tiba-tiba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *