தீயில் சிக்கிய முதியவர் மீட்பு!

top-news

மே 4,

நேற்றிரவு TAMAN ISLAND GLADES குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கிய முதியவரைத் தீயணைப்பு மீட்பு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர். நேற்றிரவு 9.59 மணிக்குத் தீவிபத்துக் குறித்தான அவைசர அழைப்பைப் பெற்றதும் தீயணைப்பு அதிகாரிகள் சம்வ இடத்திற்கு விரைந்து தீயில் சிக்கிய 73 வயது முதியவரை மீட்டதாகப் பினாங்கு மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

73 வயது முதியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மணிநேரப் பேராட்டத்திற்குப் பின் நள்ளிரவு 12.08 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீயில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் பினாங்கு மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையம் உறுதிப்படுத்தியது.

Seorang lelaki warga emas berusia 73 tahun berjaya diselamatkan dalam kebakaran di Taman Island Glades, Pulau Pinang. Mangsa mengalami sesak nafas dan kini dirawat di hospital. Kebakaran berjaya dikawal sepenuhnya selepas dua jam operasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *