போலி முதலீட்டில் RM 1.8 மில்லியனை இழந்த முதியவர்!

- Sangeetha K Loganathan
- 04 May, 2025
மே 4,
சமூக வலைத்தளத்தின் மூலமாகப் பெற்ற விளம்பரத்தை நம்பி சேமிப்புப் பணத்தை முதலீடு செய்த 66 வயது முதியவர் ஏமாற்றப்பட்டதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்மந்தப்பட்ட விளம்பரத்தின் மூலமாகப் பெறப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்வதாக நினைத்தள கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் முதலீடு செய்து வந்ததாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பரிவர்த்தனை செய்து வந்தும் எந்தவொரு தகவலும் இல்லாததால் 66 வயது முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து எந்தவொரு பதிலும் இதுவரையும் கிடைத்திருக்காத நிலையில் அந்த நிறுவனம் போலியான முகவரின் பெயரில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.
Seorang warga emas berusia 66 tahun kerugian RM1.8 juta selepas melabur dalam skim pelaburan palsu yang diiklankan di media sosial. Mangsa membuat laporan polis setelah gagal menghubungi pihak syarikat yang disyaki menggunakan butiran palsu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *