ஆயர் கூனிங்கை தேமு தக்க வைத்துக் கொள்ளும்- பெரும்பான்மையில்தான் சந்தேகம்!

top-news
FREE WEBSITE AD

ஆயர் கூனிங்கை தேமு தக்க வைத்துக் கொள்ளும்- பெரும்பான்மையில்தான் சந்தேகம்!

BN will retain Bishop Kooning - the majority is in doubt!

தாப்பா. ஏப். 26-

இன்று நடைபெறும் இடைத் தேர்தலில் ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை எந்த ஒரு பிரச்சினையுமின்றி தேசிய முன்னணி (தேமு) தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.ஆனால், அதன் இலக்கான 18 ஆயிரம் வாக்குகளை பெறுவதில்தான் அது சிரமத்தை எதிர்நோக்கக் கூடும் என்று,ஒரு சிந்தனை குழாம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

பல விவகாரங்கள் தொடர்பிலான ஓர் உறுதியான சோதனை என்று இந்த இடைத் தேர்தலை வருணித்திருக்கும் இல்ஹாம் மையம், குறிப்பாக, வாக்காளர்களின் பெரிய எண்ணிக்கையிலான ஆதரவைப் பெறுவதில், இக்கருத்துக் கணிப்புகள், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் தேமு மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையேயான கூட்டணியின் செயல்திறனை அளவிடும் என்றது.

"எனினும். 18 ஆயிரம் வாக்குகள் இலக்கை அடைவதில் தேசிய முன்னணி சிரமத்தை எதிர்நோக்கும் என்று. பேட்டி காணப்பட்டவர்களில் பெரும்பாலோர் கூறியிருக்கின்றனர்" என்று. நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது ஆய்வறிக்கையில் அம்மையம் தெரிவித்தது.

ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 31,940 தகுதி பெற்ற வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 55.97 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 22.9 விழுக்காட்டினர் சீனர்கள், 14.38 விழுக்காட்டினர் இந்தியர்கள் மற்றும் 7.5 விழுக்காட்டினர் பூர்வகுடி மக்களாவர்.

கடந்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரித்த மலாய் வாக்காளர்கள் குறிப்பாக, இளைஞர்களின் ஆதரவைப் பெறுவதுதான் எதிர்க்கட்சியினரின் குறியாக அம்மையம் கூறியது. இருப்பதாக அம் மையம் கூறியது. நவம்பர் 19ஆம் தேதி நடந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலின்போது, தான் பெற்றிருந்த அதே எண்ணிக்கையிலான வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனல் இம்முறையும் பெறுமேயானால், அது ஒரு மிகப் பெரிய சாதனையாகவே கருதப்படும்" என்றும் அம்மையம் கூறியது.

கடந்த பொதுத் தேர்தலின்போது பெரிக்காத்தான் நேஷனல். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையில் வாழும் நான்கு மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தனது சாதனையை பெரிக்காத்தானினால் தற்காத்துக் கொள்ள முடியுமா அல்லது அது பெற்றிருந்த மலாய்க்காரர்களின் அந்த ஆதரவு தேசிய முன்னணி பக்கம் திரும்பி விடுமா என்பதை பரிசோதிக்கும் ஒரு “போர்க் களமாக இன்றைய தேர்தல் விளங்கும் என்று இல்ஹாம் மையம் குறிப்பிட்டது.

இரண்டு வாரங்களாக நடந்த தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவர மிகவும் நுட்பமான அணுகுமுறையை கையாண்டதையும் மிகப் பெரிய அளவிலான பிரச்சாரங்களை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அவை வாக்குகளை சேகரித்ததையும் இல்ஹாம் மையம் கவனித்தது. இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களுடன் நேரடியாக சந்திப்புகளை நடத்துவதற்கும் வேட்பாளர்கள் நேரத்தை ஒதுக்கி இருந்ததையும் காண முடிந்தது.

தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் மிகத் தற்காப்புடன் செயல்பட்டதாகவும் பெரிக்காத்தான் நேஷனலில் இடம்பெற்றிருக்கும் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருந்தனர் என்றும் அம்மையம் கூறியது. மறுபுறம், தொழிலாளர் மற்றும் சமூக நலன்
தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த இலக்கவியல் தளங்களைப் பயன்படுத்துவதில், மலேசிய சோசலிச கட்சி (பிஎஸ்எம்) தனது அணுகுமுறையில் மிகவும் சீரான மற்றும் நிலையான நிலையில் இருந்தது.

இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் தாப்பா அம்னோ தொகுதிச் செயலாளர் டாக்டர் முஹமட் யுஸ்ரி பாகிர், பெரிக்காத்தான் நேஷனலை பிரதிநிதித்து பாஸ் கட்சியின் தாப்பா தொகுதி தலைவர் அப்துல் முஹைமின் மாலேக் மற்றும் மலேசிய சோசலிச கட்சியின் தலைமைச் செயலாளர் பவானி கன்னியப்பன் ஆகியோர் களமிறங்கி இருக்கின்றனர்.

இத்தொகுதி உறுப்பினர் இஷாம் ஷாருடின் (வயது 59) கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 15ஆவது பொதுத் தேர்தலின்போது நிலவிய ஐந்து முனை போட்டியில் இஷாம் 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தார்.

Ilham Centre menjangka Barisan Nasional mengekalkan kerusi DUN Ayer Kuning tanpa masalah besar, namun sukar mencapai sasaran 18,000 undi. Kajian menunjukkan cabaran utama datang daripada sokongan pengundi Melayu muda kepada Perikatan Nasional, menjadikan PRK ini medan ujian kekuatan gabungan kerajaan perpaduan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *