முகநூலில் ஆபாச இருவருக்கு வெ.3,000 அபராதம்!

- Muthu Kumar
- 29 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 29-
முகநூலில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்ட இருவருக்கு, சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று தலா 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அத்தகைய கருத்துகளை பதிவேற்றம் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட முஹமட் ஷாருலாமின் (வயது 41) மற்றும் முஹமட் ரகல் அப்துல் ரசாக் (வயது 44) ஆகியோருக்கு நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒஸ்மான் இத்தண்டனையை விதித்தார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் தலா ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி அவர்களுக்கு உத்தரவிட்டார். இங்கிலாந்தில் பணி புரியும் மலேசியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் பெண் குழந்தை தொடர்பிலான ஒரு முகநூல் பதிவு குறித்து முகநூலில் ஆபாசமான தகவல்களைப் பதிவு செய்யத் தொடங்கியது
உட்பட சுயநினைவோடு அவ்வாறு செய்ததாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட் டிருந்தது. 3ஆர் எனப்படும் இனம், சமயம் மற்றும் அரசக் குடும்ப விவகாரங்கள் மற்றும் ஆபாசமான பதிவுகள் இனங்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அத்தகைய கருத்துகளை பதிவிட வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் நீதிபதி நினைவுறுத்தினார்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இரவு 10.29 மணியளவில் அதே விவகாரம் தொடர்பில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை முஹமட் நசிர் காடிர் (வயது 57) என்ற மற்றொரு நபர் மறுத்தார்.இவ்வழக்கு தொடர்பான மறுசெவிமடுப்பு வரும் மே 23ஆம் தேதி நடைபெறும் என்று கூறிய ஃபுவாட், 3,000 வெள்ளி ஜாமீனில் நசிரை விடுவித்தார்.
Dua individu didenda RM3,000 setiap seorang oleh Mahkamah Sesyen Sepang kerana memuat naik komen lucah di Facebook. Mereka mengaku bersalah atas kesalahan tiga tahun lalu. Jika gagal bayar denda, mereka dipenjara sebulan. Kes seorang lagi ditunda 23 Mei.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *