மர்ம தொற்றில் பாதிக்கப்பட்ட 39 பேரில் இருவர் இன்னும் மருத்துவமனையில்!

top-news
FREE WEBSITE AD

யான், ஏப்ரல் 28: கெடா, யான் நகரில் நடைபெற்ற ஒரு முகாமில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற பிறகு மர்மமான தொற்று நோய் அறிகுறிகளைக் காட்டிய ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட மொத்தம் 39 பேர் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் (HSAH) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் இருவர் இன்னும் மருத்துவமனையின் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 வயது மாணவரும் 30 வயதுடைய பேருந்து ஓட்டுநரும் சிகிச்சை பெற்று வருவதாக கெடா உள்ளூராட்சி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் மன்சோர் ஜகாரியா தெரிவித்தார்.  

 கோலா மூடா மாவட்டத்தில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளியின் ஊழியர்கள் உட்பட 39 பேர், யானில் உள்ள ஒரு முகாமில் பயிற்சி பெற்ற பிறகு, காய்ச்சல், இருமல் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொற்று நோய் அறிகுறிகள் கண்டறியப்படுவதற்கு முன்பு, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை யான் முகாமில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது!

Selepas menyertai kem di Yan, Kedah, 39 pelajar dan kakitangan menunjukkan gejala penyakit berjangkit dan dirawat di Hospital Sultan Abdul Halim. Dua orang masih dipantau, termasuk seorang pelajar 14 tahun dan pemandu bas 30 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *