குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

- Muthu Kumar
- 27 Apr, 2025
(கோகி கருணாநிதி)
குளுவாங், ஏப். 27-
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களைத் தொடர்ந்து, குளுவாங் மாவட்ட போலீசார் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் கைது செய்தனர். குளுவாங் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் ஏப்ரல் 25ஆம் தேதி அதிகாலை 1.00 மணியளவில் குளுவாங் சுங்கை எண் RP-03, ஜாலான் பாடாங் தேம்பாக் பகுதியில் உள்ள லாடாங்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் 21 மற்றும் 22 வயதுடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான முதல் நபரிடம் கடந்த காலத்தில் ஆறு குற்றப் பதிவுகளும் மூன்று போதைப்பொருள் குற்றப் பதிவுகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது நபரிடம் இரண்டு போதைப்பொருள் சம்பவங்கள் உள்ளன. இருவரின் சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்ஃபெட்டமின் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் குற்றச்சட்டத்தின் பிரிவு 457இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்ட இருவரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்குத் தொடர்பான தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான தகவல்களோ அல்லது இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல் உள்ளவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை அல்லது குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 07-7784222, 07-7784256, 07-7766822 សំល 014-3656822 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளுமாறு குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அகாப் பஹரின் பின் மொஹ்த் நோ தெரிவித்தார்.
Di Kluang, susulan gambar tular di media sosial, polis menahan seorang lelaki dan seorang wanita berusia 21 dan 22 tahun. Kedua-duanya positif dadah dan mempunyai rekod jenayah yang banyak. Kes disiasat di bawah Seksyen 457 Kanun Keseksaan. Orang ramai diminta menyalurkan maklumat kepada polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *