ஆயர் கூனிங் வெற்றியும்- பரிவுமிக்க இந்தியர்களின் வாக்குகளும் -தான்ஸ்ரீ குமரன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் ஏப்.28-

பேராக், ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி, பக்காத்தான் ஆட்சியின் நிலைப்பாட்டிற்கு நிம்மதியை அளிக்கும் என்று தான்ஸ்ரீ க.குமரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், .கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக ஊடகங்களில் அம்னோவினர் அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை மீட்டுக் கொள்வார்கள், அதன்வழி வழி ஆட்சி கவிழக்கூடும் என்றும், மஸ்ஜிட் இந்தியா கோயில் விவகாரம் குறித்து ஊடகங்களில் இந்தியர்களுக்கு எதிராக பரப்பட்டுவரும் செய்திகளால் ஆயர்கூனிங் இடைதேர்தலில் மலாய்க்காரர்கள் இந்தியர்களின் வாக்குகள் பாதிக்கக்கூடும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் ஊடகங்களில் வெளியிட்ட ஆரூடங்களைப் புறம்தள்ளி நாட்டு நலனை மனதிலிறுத்தி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 1969-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சந்தித்த தோல்விக்குப்பின் 1974 ஆம் ஆண்டு முதல் தாப்பா தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்துக்கொண்டு வருகிறது, தாப்பா தொகுதியில் இடம் பெற்றுள்ள ஆயர் கூனிங் சட்ட மன்ற தொகுதி வாக்காளர்கள் பொதுவாகவே தேசிய முன்னணியின்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்கள்.
இரண்டு தவணை தாப்பா தொகுதியி போட்டியிட்டுள்ள(1990-1999) நான் இதனை அறிவேன்.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 31,281 வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் 11,065 வாக்குகளும், தேசிய கூட்டணி வாக்காளர் 6,059 வாக்குகளும், பி.எஸ்.எம். வேட்பாளர் 1,106 வாக்களும் பெற்றுள்ளனர். செல்லாத வாக்குகள் எண்ணிக்கை தெரியாத நிலையில், மொத்தம் 56 விழுக்காட்டினர் வாக்களிதுள்ளது மகிழ்ச்சியை அளித்தாலும் தேசிய முன்னணி வேட்பாளர் பெற்றுள்ள 30 விழுக்காடு வாக்குகள் அடுத்துவரும் பொதுத் தேர்தலில் அம்னோவிற்கு, பக்காத்தான் ஆட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய எச்சரிரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பக்காதான் அரசாங்கத்தினர் எடுக்கின்ற முடிவுகள் மக்களிடையே குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மஸ்ஜித் இந்தியா இந்து கோயில்,-முஸ்லிம் பள்ளிவாசல் விவகாரங்களைக் குறிப்பிடலாம். இனம், சமயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்போது சமய, சமுதாய தலைவர்களிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொண்டால் சமுதாய நல்லிணக்கம், சமய சகிப்புத்தன்மையை நிலைநாட்டமுடியும்.

இந்த விஷயங்களை  வாக்காளர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இந்நாட்டு இந்தியர்கள் எந்த கட்சியில் உறுப்பியம் பெற்றிருந்தாலும், நாட்டுப்பற்று, நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பதை ஆயர்கூனிங் இடைத் தேர்தல் நிரூபித்துள்ளதை மனதில்கொண்டு பிரதமர் அன்வார் இப்ராகிமும், அமைச்சர்களும் நாட்டை ஆட்சி செய்யும்படி தான்ஸ்ரீ குமரன் கேட்டுக்கொண்டார்.

Tan Sri K. Kumaran berkata kemenangan Barisan Nasional di Ayar Kuning memberi kestabilan kepada kerajaan Pakatan Harapan. Beliau menegaskan pengundi mengutamakan kepentingan negara, walaupun wujud spekulasi negatif sebelum ini. Beliau mengingatkan kerajaan supaya menangani isu sensitif dengan bijaksana.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *