ஆயர் கூனிங் பன்றிப் பண்ணைகளால் ஆற்று நீரில் தூய்மைக்கேடு ஏற்படவில்லை!

top-news
FREE WEBSITE AD

தாப்பா, ஏப். 26-

ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்பது பன்றிப் பண்ணைகளும் கழிவுகளை அகற்றுவதற்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றன.அதனால், அத்தொகுதியில் உள்ள ஆறுகளின் நீரில் மாசு ஏற்படவில்லை என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர்
டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு கூறியுள்ளார்.

இதன் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னர் பேராக் மாநில கால்நடை சேவை இலாகா ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அப்பண்ணைகளின் கழிவுகள் ஆறுகளில் பாய்ச்சப்படுவதற்கு முன்னர், முதலில் குளங்களில் பாய்ச்சப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள்படி சுத்திகரிப்பு செய்யப்படுவதை அவ்விலாகா உறுதிப்படுத்தியதாகவும் முஹமட் தெரிவித்தார்."ஆறுகளில் பாய்ச்சப்படும் கழிவுகள் மீதான தூய்மை குறித்த ஆய்வின் முடிவு, ஆற்று நீர் பாதுகாப்பானதாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆதலால், தொகுதியில் உள்ள ஒன்பது பன்றிப் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நீர்த் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தவில்லை.“இதன் தொடர்பில் இதர தரப்பினர் மாறுபட்ட ஆய்வுகளைக் கொண்டிருந்தால், அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்" என்று, தாப்பாவில் நேற்றுமுன்தினம் இரவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் முஹமட் தெரிவித்தார்.

விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அதிகாரத் தரப்பினர் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்று கூறிய முஹமட் விதிமுறைகள் மீறப்பட்டால் அல்லது தூய்மைக்கேடு ஏற்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மலாய்க்காரர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு அருகில் பன்றிப் பண்ணைகள் இருப்பதாகவும் அதனால் ஆறுகளில் தூய்மைக்கேடு ஏற்படுவதாகவும், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் வருகின்றன. பன்றிப் பண்ணைகள் அருகில் இருப்பதால், பேராங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பீபோர் ஆறு மாசு அடைந்திருப்பதால் அதைப் பயன்படுத்த முடியாது என்று, பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு கடந்த புதன்கிழமை குற்றஞ்சாட்டி இருந்தது. அதோடு, பத்தாங் பாடாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய மாவட்டங்களில் 30 பன்றிப் பண்ணைகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக, பாஸ் கட்சி உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையில் வசிக்கும் பகுதிகளில் சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான பன்றிப்பண்ணைகள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.எனினும், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் புதிய பன்றிப் பண்ணைகள் செயல்பட அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.

தற்போது இருக்கும் பன்றிப் பண்ணைகள் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் நவீன தோட்டத்துறை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே அவை அங்கு அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

Menteri Mohamad Sabu menyatakan sembilan ladang babi di Ayer Kuning mematuhi prosedur pelupusan sisa dan tidak mencemarkan sungai. Jabatan Perkhidmatan Veterinar mengesahkan air sungai bersih. Kerajaan akan terus memantau ladang, dan tindakan tegas diambil jika berlaku pelanggaran undang-undang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *