மகள் கதீஜாவின் ஹிஜாப் குறித்து ரஹ்மான் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

சில வருடங்களுக்கு முன்பு, தனது குடும்ப புகைப்படத்தை ரஹ்மான் பகிர்ந்தபோது, அவரது மகள் கதீஜா ஹிஜாப் அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஹ்மான் தனது மகளை கட்டாயப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.

சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித்தின் போட்காஸ்டில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான், தனது திரைப்பயணம் மற்றும் குடும்பம் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அந்த ஹிஜாப் சர்ச்சை குறித்தும் அவர் மனம் திறந்தார். இணையத்தில் பரவிய தவறான செய்திகள் மற்றும் விமர்சனங்களை தனது மகள் தைரியமாக எதிர்கொண்ட விதத்தை அவர் பாராட்டினார். "பொது வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு விருப்பம் தான்; ஒரு பணக்காரன் முதல் கடவுள் வரை, எல்லோரும் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒற்றுமையாக இருக்கும் வரை, ஆணவம் இல்லாமல், மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருக்கும் வரை போதும்.

என் மகளுக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது, அவளுடன் சண்டையிடுவதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை. அவள் இரண்டு பக்க மின்னஞ்சல்களை மிகவும் அருமையாக எழுதி அனுப்புவாள், அதை நான் வியந்து பார்ப்பேன். 'அப்பாவுக்கு என் கடிதங்கள்' என்று ஒரு புத்தகம் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி மற்றும் மற்றொரு மகள் ரஹீமா ஆகியோர் ஹிஜாப் அணியாமல் இருக்க, கதீஜா மட்டும் புர்கா அணிந்திருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் ரஹ்மானை 'இரட்டை வேடம் போடுபவர்' என்று கடுமையாக விமர்சித்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு அப்போது பதிலளித்த கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மேடையில் என் அப்பாவுடன் நான் இருந்ததைப் பற்றி சமீபத்தில் பரவலாக பேசப்படுகிறது. இவ்வளவு பெரிய வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், என் தந்தை என்னை இந்த உடையை அணிய வற்புறுத்துவதாகவும், அவர் இரட்டை வேடம் போடுவதாகவும் சில கருத்துகள் வந்தன.

நான் அணியும் உடை அல்லது நான் எடுக்கும் வாழ்க்கை முடிவுகள் என் பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூற விரும்புகிறேன். இந்த ஹிஜாப் அணிவது எனது தனிப்பட்ட விருப்பம், அதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *