சாமானியனிடம் முடி வெட்டிக்கொண்ட ராகுல்காந்தியின் பாச வழி..வரும் தேர்தலில் வெற்றிக்கு வழி வகுக்குமா!

- Muthu Kumar
- 16 May, 2024
நாடாளுமன்றம் தேர்தல் களத்தில் மோடியையும், பாஜகவையும் கடுமையான கேள்விகளால் வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி தனது எளிமையான நடவடிக்கைகளால் மக்கள் மனங்களை வென்று வருகிறார்.
சாமானிய மக்களிடம் அவர் காட்டும் நெருக்கமும், பாசமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்திற்கு சென்ற போது அங்குள்ள முடி திருத்தம் செய்யும் கடையில் சென்று தனது தாடி டிரீம் செய்து கொண்டார்.
முதலில் கடையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை காட்டி, இதில் எந்த வகையான தாடி தனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கேட்டறிந்தார். முடி திருத்துபவர் 2 படங்களை காட்டினார். அதற்கு அவற்றில் ஏதேனும் ஒரு மாதிரி தனக்கு டிரீம் செய்யுமாறு ராகுல் காந்தி கூறினார்.
முடி திருத்தும் தொழிலாளியிடம் மகிழ்ந்து கலந்துரையாடி அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். ராகுல் காந்தியை பார்த்தாலே உற்சாகமடையும் ரேபரேலி மக்கள் அவர் வந்து சென்ற சலூன் கடையை சூழ அந்த கடை ஒரே நாளில் பிரபலம் அடைந்துள்ளது. ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு முடி திருத்தம் செய்ய வருவதுடன் ராகுல் காந்தி அமர்ந்த இருக்கையில் அமர்ந்து முடித்திருத்தம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *