சிம்புவைப் பற்றி உருக்கமாக பேசிய நடிகர் சந்தானம்!

- Muthu Kumar
- 06 May, 2025
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், பேசிய சந்தானம் "நான் இந்த இடத்தில் நிற்பதற்குக் காரணமே சிம்புதான், அவர் இல்லை என்றால் நான் இல்லை. இந்த விஷயத்தை நான் பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன், இனியும் சொல்லுவேன்.
மன்மதன் படத்தில் எனது முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு ஒரு ஓப்பனிங் காட்சி வைக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். அப்போதே எனக்கு திரையில் நல்ல வரவேற்பு கிடைக்கவேண்டும் என எனக்கு மன்மதன் படத்தில் ஒரு ஓப்பனிங் ஷாட் வைத்திருந்தார். அப்போதிலிருந்தே என்மீது அதிகம் அக்கறைகொண்டவர் சிம்பு. அந்த அக்கறை இன்றுவரை அவரிடம் இருந்து குறையவில்லை.
தற்போது நடிக்கப்போகும் STR 49 படத்தில் கூட எனது கதாபாத்திரம் நன்றாக இருக்கவேண்டும் என இயக்குநரிடம் பலமுறை கூறியுள்ளார் அதை நானும் பார்த்திருக்கிறேன். இப்போதும் எனது கதாபாத்திரம் நன்றாக வரவேண்டும் என்றுதான் அவர் நினைத்திருந்தார். இப்படிப்பட்ட அன்பும், ஆதரவும் என இப்படிப்பட்ட ஒருவர் எனக்குக் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லனும் ஐ லவ் யு சிம்பு" என நடிகர் சந்தானம் மேடையில் உருக்கமாக பேசினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *