மாரி செல்வராஜ் இயக்கம் புதிய படத்தில் நடிகர் தனுஷ்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் தன்னுடைய அயராத உழைப்பு மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் தனுஷ். கடைசியாக ராயன்   படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி எனத் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L. Rai) இயக்கத்தில் உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein) படத்தின் ஷூட்டிங் பனாரஸில் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது, தனுஷ் தமிழில் அவரின் இயக்கத்திலே இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அருண் விஜய்யும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷின் "டி56" (D56) திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கவுள்ளார். இவரின் இயக்கத்தில் ஏற்கனவே தனுஷ் கர்ணன் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும், இந்த கூட்டணி இணைந்துள்ளது. தற்போது இந்த படத்தின் அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

எந்தவித எதிர்பார்ப்புகளும், முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை வழங்கியுள்ளது. நடிகர் தனுஷின் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

தற்போது வெளியான இந்த போஸ்டரில் மண்டை ஓட்டுடன் கூடிய பெரிய வாள் ஒன்று இருக்கிறது. மேலும் இந்த போஸ்டரானது "Roots begin a Great War" என்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. நடிகர் தனுஷின் இந்த படமானது வரும் 2026 அல்லது 2027ம் ஆண்டில் வெளியாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *