பத்மபூஷன் விருது பெறும் நிகழ்வில் பிரதமர் மோடியை கண்டுகொள்ளாத நடிகர் அஜித்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவில் ஆண்டு தோறும் சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்படுவது உண்டு.
அந்த வகையில் இந்த முறை 139 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதில், நடிகர் அஜித், நடிகை ஷோபனா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றது. சினிமாவை போன்று பல்வேறு துறையில் இருப்பவர்களும் குடியரசுத்தலைவர் கையால் விருதுகளை பெறுவார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் கார் பந்தயங்களில் உலக அளவில் சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் நிகழ்ச்சியில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. இதனை கெளரவிக்கும் விதமாக அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடிகர் சிவாஜி கணேசன் 1984ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை பெற்றார்.அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பத்மபூஷன் விருதை பெற்றார்.

இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் இறந்த பிறகு அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் பத்மபூஷன் விருது பெரும் 5வது நபர் அஜித் இருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகராக திகழ்கிறார். இவருக்கு அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கையால் பத்மபூஷன் விருதை பெற்றார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் காணொளிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அஜித் குமாரின் பெயரை அறிவித்ததும் எழுந்து நின்ற அஜித் சபையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் படி தலைவணங்கி வணக்கம் சொன்னார்.

அங்கு நாட்டின் பிரதமர் மோடி அமர்ந்திருந்தார், ஆனால், அஜித் அவர்களை பார்க்காதது போல் தெரிகிறது. பத்மபூஷன் விருதை பெறுவதற்கு முன்பு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை பார்த்து தலைவணங்கி வணக்கம் செய்தார். அவரது மரியாதையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் அஜித்திடம் பத்மபூஷன் விருதை வழங்கினார். அப்போது அனைவரும் கை கோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தார்கள். இருப்பினும் நாட்டின் பிரதமரை கண்டுக்காமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *