பன்றிப் பண்ணை பிரச்சாரங்கள் பெரிக்காத்தானுக்கு வாக்குகள் கிடைப்பதை தடுக்கும்!

- Muthu Kumar
- 25 Apr, 2025
பீடோர், ஏப். 25-
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது பெரிக்காத்தான் நேஷனல் பயன்படுத்தி வரும் பன்றிப் பண்ணைகள் குறித்த பிரச்சாரங்கள், மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை கிடைக்கச் செய்யாமல் ஆக்கிவிடும் என்பதை பெர்சத்து ஒப்புக் கொண்டுள்ளது.
எனினும், ஆயர் கூனிங் தொகுதி மக்களின் மனக் குறைகளை வெளிப்படுத்தும் வகையில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பன்றிப் பண்ணை விவகாரத்தை எழுப்பி வருவதாக, அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கூறியுள்ளார்.
"உண்மைதான். பன்றிப்பண்ணை குறித்த தேர்தல் பிரச்சாரங்கள் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளருக்கான வாக்குகளை இழக்கச் செய்யும். ஆனால், ஆயர் கூனிங் தொகுதியில் பன்றிப் பண்ணைகள் அதிகளவில் இருப்பதுதான் உள்ளூர் மக்களின் உண்மையான பிரச்சினை.
“ஆதலால், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சரானி முஹமட் இந்த விவகாரத்தை கடுமையானதாக கருதவில்லை என்று மலாய்க்காரர்களான நாங்கள் உணருகின்றோம்" என்று பேராக், பீடோரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது ஹம்ஸா தெரிவித்தார். பெரிக்காத்தானின் அத்தகைய பிரச்சாரங்கள் மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகள் கிடைப்பதைத் தடுக்கும் என்று. அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருப்பது குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பன்றிப் பண்ணைகள் அருகில் இருப்பதால், பேராங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பீடோர் ஆறு மாசு அடைந்திருப்பதால் அதைப் பயன்படுத்த முடியாது என்று, பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு நேற்றுமுன்தினம் புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.இதனிடையே, பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்க பெரிக்காத்தான் நேஷனலுடன் அம்னோ கூட்டுச் சேர்ந்தால், பன்றி வளர்ப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்ஸா தெரிவித்தார்.
Perikatan Nasional akui isu ladang babi di Ayer Kuning jejas undi bukan Melayu, namun tetap bangkitkan isu demi luah keresahan penduduk. Hamzah Zainudin nyatakan masalah itu perlu ditangani walaupun berisiko kehilangan sokongan pengundi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *