ஆசிரியர்களே உண்மையான ஹீரோக்கள்! - அன்வார்

- Shan Siva
- 16 May, 2025
கோலாலம்பூர், மே 16:
மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் உண்மையான ஹீரோக்கள் என்றும்,
நாட்டின் கல்விப் பணி நிறைவேற்றப்படுவதை உறுதி
செய்வதற்காக அறிவைப் பெறுவதில் மிகச் சிறந்த முகவர்கள் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
அன்வர் தனது
முகநூல் பக்கத்தில் ஒரு காணொளி கிளிப் மூலம் இன்று பகிரப்பட்ட சிறப்பு ஆசிரியர்
தினச் செய்தியில், ஒரு மடானி
தலைமுறையை உருவாக்கி மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டின்
முதுகெலும்பாக விளங்கும் கல்வியாளர்களின் வலுவான மனப்பான்மைக்கு தனது
பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கற்பிக்கும்,
வழிகாட்டும் மற்றும் அறிவை வழங்கும் நமது
அனைத்து கல்வியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
அவர் கூறினார்.
நேர்மையுடனும்
உறுதியுடனும் அறிவை விதைக்கும் உங்கள் பணியைத் தொடருங்கள். ஆசிரியர்களின் அளவிட
முடியாத பங்களிப்புகளுக்கு நாம் அனைவரும் சாட்சிகள்; மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உண்மையான ஹீரோக்கள் ஆசிரியர்கள்தான் என்று அவர் கூறினார்.
வாழ்க்கையில்,
நாம் யாராக இருந்தாலும் - அது ஒரு தலைவராக,
மருத்துவராக, பொறியாளராக, விவசாயியாக
அல்லது பிரதமராக இருந்தாலும் - நாம் அனைவரும் ஒரு முறை படிக்க, எழுத மற்றும் எண்ணக் கற்றுக்கொண்டோம். அது
அனைத்தும் வகுப்பறையில் தொடங்கியது என்று அவர் நினைவூட்டினார்.
எனவே, ஆசிரியர் தினத்துடன் இணைந்து, அனைத்து கல்வியாளர்களுக்கும் மிகுந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்வதாக அன்வார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *