இன – மத உணர்வைத் தூண்டினால் கடும் நடவடிக்கை! – MCMC எச்சரிக்கை

- Shan Siva
- 16 May, 2025
புத்ராஜெயா, மே 16: சரவாக்கில் இன உணர்வைத் தூண்டக்கூடிய உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் ஒரு பேஸ்புக் பயனரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரித்து வருகிறது.
நேற்று நெகிரி
செம்பிலானில் உள்ள லென்கெங் காவல் நிலையத்தில் அந்த நபர் வாக்குமூலம் அளித்ததாக MCMC
ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச்
சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ்
விசாரிக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக RM500,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும்
விதிக்கப்படலாம்.
ஆன்லைனில்
உள்ளடக்கத்தைப் பகிரும்போது அல்லது பதிவேற்றும்போது பொறுப்புடனும் நெறிமுறையுடனும்
செயல்படுமாறு MCMC பொதுமக்களுக்கு
நினைவூட்டியது.
புண்படுத்தும்
விஷயங்களை, குறிப்பாக இனம்,
மதம் மற்றும் அரச குடும்பத்தைத் தொடும்
உள்ளடக்கத்தைப் பரப்புவது கடுமையான குற்றம் என்றும், அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அது கூறியது.
சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபருக்கும் எதிராக, அவர்களின் பின்னணி அல்லது நிலை எதுவாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *