சூரியின் மாமன் பட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன்!

- Muthu Kumar
- 13 Apr, 2025
தமிழ் சினிமாவில் தற்போது காமெடியனாக இருந்து, முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருபவர் சூரி.இவர் இறுதியாக விடுதலை 2 படத்தில் நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான விடுதலை 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சூரி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் விடுதலை பார்ட் 2 படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் இடம்பிடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து மாமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை விமல் நடித்த விலங்கு வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தளத்திற்குப் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தில் நடித்து வரும் நிலையில், மாமன் படத்தின் ஷூட்டிங் தளத்திற்கு சர்ப்ரைஸாக சென்றுள்ளார். சமீபகாலமாகச் சூரி மற்றும் சிவகார்த்திகேயனுக்கிடையே பிரச்சனைகள் இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
இந்த பதிவில் நடிகர் சூரி "மிக்க நன்றி தம்பி, உங்கள் அன்பிற்கும், மாமன் படப்பிடிப்புக்கு வந்து எங்களை வழங்கியதற்கும்.
உங்களின் வருகை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது என நடிகர் சூரியும் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். நடிகர் சூரி முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை லார்க் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.
மேலும் நடிகர்கள் சுவாசிகா, ராஜ் கிரண், பாபா பாஸ்கர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் இப்படமானது வரும் 2025ம் ஆண்டு கோடைக்காலத்திற்குள் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படமானது முற்றிலும் காமெடி கலந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *