வாகனங்களை மறித்து கைகலப்பில் ஈடுப்பட்ட இளைஞர் கைது!

- Sangeetha K Loganathan
- 24 Apr, 2025
ஏப்ரல் 24,
சாலையின் நடுவே வாகனத்தை மறித்து ஆடவர் ஒருவர் கைகலப்பில் ஈடுபடும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். சம்மந்தப்பட்ட காணொலியின் அடிப்படையில் காவல்துறையினரால் போதைப்பொருள் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான ஆடவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் Taman Berlian Biru குடியிருப்புப் பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Bahrin Mohd Noh தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் 28 வயது உள்ளூர் ஆடவர் என்றும 4 போதைப்பொருள் வழக்குகளுக்காகத் தேடப்படும் குற்றவாளி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்ட போதும் methamphetamine வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தோதனையில் தெரிய வந்துள்ளதாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Seorang lelaki tempatan berusia 28 tahun ditahan selepas tular video dia menghalang kenderaan dan bergaduh di jalan. Suspek dikehendaki atas empat kes dadah dan didapati positif methamphetamine ketika ditahan di Taman Berlian Biru, Kluang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *