அஜித் படத்திற்கு வந்த சிக்கல்! இளையராஜா நோட்டீஸ்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஏப்ரல் 15: தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது  அஜித்குமாரின் ’குட் பேட் அக்லி’ திரைப்படம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது தற்போது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டுப்புற பாட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பல பாடல்கள் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட மூன்று பாடல்களும் இளையராஜா இசையில் உருவான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தான் இளையராஜா குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், தன்னுடைய அனுமதி இல்லாமல் மூன்று பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும், மேலும் அந்த மூன்று பாடல்களை திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது, தான் இசையமைத்த ஒரிஜினல் பாடலின் தன்மையை தடுக்கும் விதமாக இந்தப் பாடல்கள் அமைந்திருப்பதாக கூறியுள்ளார். பின்பு நிபந்தனையற்ற எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நோட்டீஸ் அனுப்பபட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்கும் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *