ஆடவைரக் கொடூரமாகத் தாக்கிய ஒரு பெண் உட்பட 8 இளைஞர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
கும்பலொன்று வீட்டுக்குள் கட்டி வைத்து ஆடவர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கும்படியானச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 19 முதல் 26 வயதுடைய ஒரு பெண் உட்பட 8 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலால் பாதிக்கப்பட்ட 21 இளைஞர் மருத்துவமனையிலிருந்தபடி காவல்நிலையத்திற்குத் தொலைபேசி மூலமாகப் புகார் அளித்த நிலையில் தாக்குதல் நடத்திய 8 பேரையும் Plentong Baru Masai குடியிருப்புப் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணிக்குக் கைது செய்ததாக SERI ALAM மாவட்டக் காவல் ஆணையர் MOHD SOHAIMI ISHAK தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் 6 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக SERI ALAM மாவட்டக் காவல் ஆணையர் MOHD SOHAIMI ISHAK தெரிவித்தார். சமூகவலைத்தலத்தில் அறிமுகமானப் பெண் அவரின் வீட்டிற்கு அழைத்ததாகவும் வீட்டிலிருந்த ஆடவர்களால் 21 வயது இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக SERI ALAM மாவட்டக் காவல் ஆணையர் MOHD SOHAIMI ISHAK தெரிவித்தார்.
Lapan individu termasuk seorang wanita berusia antara 19 hingga 26 tahun ditahan kerana disyaki menyerang seorang lelaki secara kejam di rumah. Mangsa berusia 21 tahun membuat laporan dari hospital selepas kejadian yang berlaku di Plentong Baru Masai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *