சிம்பு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து !

- Muthu Kumar
- 30 Apr, 2025
சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஸ்வத் மாரிமுத்து "டிராகன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னே சிம்புவுடன் STR 51 படத்தை இயக்கவுள்ளேன் என்று அறிவித்திருந்தேன். நடிகர் சிலம்பரசனின் 51வது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உருவாகவுள்ளது, எனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்தே சிம்பு என்மீது நம்பிக்கை வைத்து STR 51 படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.
டிராகன் திரைப்படம் ஹிட்டானதும், அது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் சிலம்பரசனின் பலவிதமான நடிப்பையும் நீங்கள் பார்ப்பீர்கள். இந்தப் படத்தில் டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஆக்ஷ்ன் வேணுமா ஆக்ஷ்ன் இருக்கு என்று கூறினார். மேலும் இந்த STR 51 திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 செப்டம்பர் மாதத்தில் சிறப்பாகத் தொடங்கவுள்ளது.
அதற்கு முன் சிம்பு அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். இந்த STR 51 படமானது நிச்சயம் வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் இந்த STR 51 படத்தில் காதலின் கடவுள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். பழைய படங்களில் பார்த்த சிம்பு இந்த படத்தில் வருவார் என்று அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த STR 51 திரைப்படத்தில் கோட், டிராகன் போன்ற படங்களைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். எண்டெர்டைமென்ட் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *