துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளையும் பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது!

top-news

ஏப்ரல் 24,

ஷா அலாமில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் உரிமம் இல்லாமல் துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளை வைத்திருந்த 69 வய்து முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய முதியவரின் வீட்டில் நேற்று மாலை 5 மணியளவில் இச்சோதனையை மேற்கொண்டதில் CZ 75, Smith & Wesson, CAL 22/5.5M வகையிலான மூன்று கைத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தததுடன் 186 துப்பாக்கித் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலி ஆவணங்களின் மூலமாகக் கைத்துப்பாக்கிகளையும் அதன் பாகங்களையும் சேகரித்து வருவதாகக் கைது செய்யப்பட்ட முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட முதியவர் தனது 2 சொகுசு வாகனங்களிலும் அரசு முத்திரைகளையும் போலியாகப் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Datuk Hussein Omar Khan தெரிவித்தார். சுல்தானின் உயரிய விருதான Tuanku Zulkarnain எனும் விருதையும் போலியாகப் பயன்படுத்தியருக்கும் முதியவரைக் காவல்துறையினர் 6 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைத்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

Seorang warga emas berusia 69 tahun ditahan di Shah Alam selepas didapati menyimpan tiga pistol, 186 peluru dan bahan letupan tanpa lesen. Dia dipercayai mengumpul senjata itu lebih 20 tahun menggunakan dokumen palsu, termasuk menyalahgunakan lambang rasmi kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *