மலிவு விலை சாராயம் மீதான எதிர்ப்பலைகள் தொடரட்டும்- டத்தோ மரியதாஸ் கோரிக்கை!

- Muthu Kumar
- 24 Apr, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஏப். 24-
சந்தைகளில் பரவலாக விற்கப்பட்டு வரும் மலிவு விலை சாராயத்திற்கு எதிராக கடந்த காலங்களில் நிலவி வந்த எதிர்ப்பும் கண்டனமும் தொடர்ந்து எதிரொலிக்க வேண்டுமென்று. பினாங்கு மாநில இந்திய சமூகக் காவலர் டத்தோ கோ.மரியதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
பல்வேறான சமூக சீர்கேடுகளுக்கு வித்திடும் மலிவு விலை சாராய விற்பனையை முற்றாக துடைத்தொழிக்கும் வேட்கையில், கடந்த காலங்களில் பற்பல பொது இயக்கங்கள்
சீற்றமுடன் குரலெழுப்பிய எதிர்ப்பலைகள் தொய்வின்றி தொடர்ந்து ஒலித்திட வேண்டுமென்று அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆடவர்களில் பலர் இக்கொடியப் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல், அற்ப ஆயுளில் மடிவது வேதனைக்குரியதென்றும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஏதுவாக, கடுமையான சட்ட விதிகளை அமல்படுத்த வேண்டி, அரசாங்கத்திடம் தங்கள்ஆட்சேபனைகளை பதிவிட்டு வந்த, சமூக ஆர்வலர்கள் யாவரும், தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடண் மரியதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மலிவு விலை சாராய விற்பனையை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு பலத்த எதிர்ப்புக் குரல்கள், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உள்பட, இதரப் பொது அமைப்புகளும் தீவிரமாக முழக்கமிட்டு வந்த அதே வேகமும் கண்டனமும் பலமுடன் நீடித்து வந்தால், இந்த அவல நிலைக்கு சிறந்த பரிகாரம் காண்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக அமைவது திண்ணமென்று, பினாங்கு மாநில இந்து சபா தலைவருமான அவர் முறையிட்டுள்ளார்.
சாராய விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான கடும் சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படாமல், அவை யாவும் சர்வ சாதாரணமாக உணவகங்கள், பலசரக்குக் கடைகள் மற்றும் அங்காடி தெருக்களில் விற்பனை செய்யப்படுகின்ற குறைபாடுகளுக்கு தக்கதோர் தீர்வு காணப்படுவது அவசியம் என்றும், மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இவ்வகையான பானங்களை எவரும் எளிதில் வாங்கக் கூடிய இலகுவான வாய்ப்புகளுக்கு எவ்விதத்திலும் தடை விதிக்கப்படாமலிருப்பது முதற்கண் அபாயமென்றும் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி இவற்றின் விற்பனை சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Datuk G. Mariadas menyeru agar penentangan terhadap penjualan arak murah diteruskan tanpa henti. Beliau menekankan kesannya terhadap masyarakat India dan gesa kerajaan kuatkuasakan undang-undang lebih tegas untuk membanteras penjualan bebas arak murah di kedai dan pasar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *