கேடிஎம்பி பெயரை மாற்றுவது தேவையற்ற ஒன்று!

- Muthu Kumar
- 23 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 23-
கெரேத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) என்ற பெயர், காலத்தை கடந்த ஒன்றாக இருப்பதால், இப்பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற ஒரு பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.தேசிய பாரம்பரியமும் மரபும் முக்கியம் என்பதோடு அவை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதால், கேடிஎம்பி எனும் பெயர் மாற்றப்பட வேண்டியது அவசியமற்றது என்றும் தீர்க்கமாகக் கூறப்பட்டுள்ளது.
கேடிஎம்பி என்பது ஒரு நிறுவனத்தின் பெயராக இருப்பதோடு. தனது நிறுவன அடையாளத்தை ஒன்றிணைக்கவும் உதவியது. ஆனால், தனது முக்கிய வாடிக்கையாளர்களின் சின்னமாக அது இருக்கவில்லை என்று கேடிஎம்பி கூறியது.
அதன் பெயரில் தேசிய பாரம்பரியமும் மரபும் அடங்கி இருப்பதாகவும் நவீன போக்குவரத்து தேவைகளை ஈடுசெய்ய அவ்வப்போது தனது சேவையையும் கேடிஎம்பி மேம்படுத்திக் கொண்டுதான் வருகிறது.
"கடந்த 1885ஆம் ஆண்டில் உதயமான கேடிஎம்பி. மலேசியாவின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த ஒரு வளமான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. கெரேத்தாப்பி தானா மெலாயு என்ற அதன் பெயர் இந்த மரபை பிரதிபலிக்கிறது. இருப்பினும், மலேசியா வளர்ச்சியடைந்து வருவதால், கேடிஎம்பியும் வளர்ச்சி அடைந்துதான் வருகிறது.
“எங்களின் சேவையை மேம்படுத்துவதில் நாங்கள் குறிப்பிட்ட முன்னேற்றங்களைக் கண்டும் இருக்கின்றோம். மின்சார ரயில் சேவை (இடிஎஸ்), கேடிஎம் பயணிகள் சேவை மற்றும் நகரங்களுக்கு இடையிலான கேடிஎம் சேவை ஆகியவையும் அவற்றில் அடங்கும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலத்திற்கு ஏற்ப இருப்பதற்காக தனது பெயரை கேடிஎம்பி மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு முன்னாள் விளையாட்டுப் பிரிவு எழுத்தாளரான ஜான்சன் ஃபெர்னாண்டஸ் முன்வைத்திருந்த பரிந்துரை குறித்து விளக்கமளிக்கும்போது கேடிஎம்பி இவ்வாறு தெரிவித்தது.
KTMB menolak cadangan tukar nama kerana nama kini lambangkan warisan negara. Nama "Keretapi Tanah Melayu" dianggap penting dan tidak perlu diubah. KTMB akan terus tingkatkan perkhidmatan untuk penuhi keperluan moden.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *