தேசியக் கொடி விவகாரத்தில் இரட்டை வேஷம் கிடையாது-அன்வார் திட்டவட்டம்!

- Muthu Kumar
- 25 Apr, 2025
புத்ராஜெயா, ஏப். 25-
தேசியக் கொடி அல்லது ஜாலூர் கெமிலாங் வடிவமைப்பில் தவறு நடந்திருக்குமேயானால், அதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை வெளியான கல்வி அமைச்சின் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் தொடர்பிலான ஆய்வறிக்கையை தயாரிப்பதில் தேசியக் கொடி வடிவமைப்பில்
ஏற்பட்டுள்ள தவறுக்குப் பொறுப்பான வர்களும் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தேசியக் கொடி விவகாரத்தில் உள்ளூர் தகவல்
சாதனங்களோ, அனைத்துலக நிறுவனங்களோ அல்லது அரசாங்க நிறுவனங்களோ சம்பந்தப்பட்டிருந்தாலும், விசாரணை நிச்சயம் நடத்தப்படும் என்று அன்வாரின் மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா தெரிவித்தார். -தேசிய சின்னமான தேசியக் கொடிக்கான நீதியும் மரியாதையும் அனைவராலும் கட்டிக் காக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.
"நாட்டின் கௌரவம் அல்லது தேசிய சின்னங்களுடன் தொடர்புடைய உள்ளடக்கங்களை வெளியிடும்போது, அனைவரும் அவசியம் கூடுதல் விழிப்புடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும்" என்று, நேற்று முகநூலில் வெளியிட்ட ஒரு காணொளியில் அவர் குறிப்பிட்டார்.
தனது எஸ்பிஎம் முடிவுகள் ஆய்வறிக்கையில், தேசியக் கொடியின் வடிவமைப்பில் ஒரு தவறு நிகழ்ந்திருப்பதற்காக, கல்வி அமைச்சு நேற்று முன்னதாக மன்னிப்புக் கேட்டிருந்தது. இத்தகைய தவறை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒப்புக் கொண்ட கல்வி அமைச்சு, அதன் தொடர்பில் முழு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியிருந்தது.
அந்த ஆய்வறிக்கையில், வகுப்பறையில் மாணவர்கள் இருக்கும் படம் இருந்தது. அதில் சுவரில் ஒரு நட்சத்திரத்திற்கு பதிலாக இரண்டு நட்சத்திரங்களுடன் தொங்கவிடப்பட்ட தேசியக் கொடி இருந்தது. அக்கொடியில் 14க்கு பதிலாக எட்டு சிவப்பு மற்றும் வெள்ளைக் கோடுகள் மாறி மாறி இருந்தன.
Perdana Menteri Anwar Ibrahim beri jaminan tindakan tegas akan diambil jika berlaku kesilapan pada Jalur Gemilang. Siasatan sedang dijalankan terhadap kesilapan dalam laporan SPM. Semua pihak wajib hormat dan pelihara lambang kebangsaan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *