5 நாள்கள் தேடலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!

- Sangeetha K Loganathan
- 25 Apr, 2025
ஏப்ரல் 25,
Autisme சிறுவனான 5 வயது சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை காணாமல் போன நிலையில் 5 நாள்கள் தொடர் தேடுதலுக்குப் பின் Sungai TAMPARULI ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். 5 வயது சிறுவனான ANIQ FAIZ எனும் சிறுவன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் காணாமல் போன இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக TUARAN மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் MOHAMAD NOR AMIT தெரிவித்தார்.
15 க்கும் மேற்பட்ட மீட்பு படை அதிகாரிகள் கடந்த 5 நாள்களாகத் தேடி வந்ததாகவும் பொதுமக்களின் உதவியால் சிறுவன் உடல் ஆற்றோரத்தில் உள்ள மரத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்ததாகவும் TUARAN மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் MOHAMAD NOR AMIT தெரிவித்தார். உயிரிழந்த சிறுவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையைக் கவல்துறையினர் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang kanak-kanak autisme berusia lima tahun yang hilang sejak Ahad lalu ditemui mati di Sungai Tamparuli selepas lima hari pencarian. Mayat Aniq Faiz dijumpai tersangkut pada pokok kira-kira 3km dari lokasi kehilangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *