விபத்தில் சிறுமி பலி! பெற்றோர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 24 Apr, 2025
ஏப்ரல் 24,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தி மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது தாயும் 24 வயது தந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Azrul Hisham Mohd Shaffei தெரிவித்தார். நள்ளிரவு 12.40 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் பெற்றதும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக அவர் தெரிவித்தார்.
மவுண்ட் ஆஸ்டின் பூங்காவிலிருந்து அடா ஹைட் பூங்காவிற்குச் செல்லும் சாலையில் வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயமடைந்த பெற்றோர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களிடம் விசாரணையைத் தொடர்வதாக தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Azrul Hisham Mohd Shaffei தெரிவித்தார்.
Kemalangan tragis berlaku apabila sebuah kereta hilang kawalan dan merempuh pokok, menyebabkan seorang kanak-kanak perempuan berusia 3 tahun maut di tempat kejadian. Ibu bapa mangsa cedera parah dan sedang menerima rawatan di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *