ஆற்றில் பன்றியின் கழிவுகள்! மாநில அரசின் கையாலாகாத ஆட்சி! பஸ் சாடல்!

top-news

ஏப்ரல் 24,

பேராக்கின் முக்கிய குடிநீர் நீர்நிலையான Sungai Bidor ஆற்றில் பன்றியின் கழிவு கலக்கப்பட்டிருப்பது பேராக்கிலுள்ள இஸ்லாமியர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகப் பாஸ் கட்சியின் உதவித் தலைவர் Datuk Idris Ahmad தெரிவித்துள்ளார். பீடோரில் அமைந்துள்ள பன்றி பண்ணையிலிருந்து அதன் கழிவுகள் ஆற்றில் கலக்கப்பட்டிருப்பதை மாநில அரசு இத்தனை ஆண்டுகளாக வேடிக்கை பார்த்திருப்பதாகவும் முறையானப் பாதுகாப்பின்மையான மாநில அரசாக Datuk Seri Saarani Mohamad ஆட்சி இருப்பதாக Datuk Idris Ahmad குற்றம் சாட்டினார். 

சம்மந்தப்பட்ட பன்றி பண்ணை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் குடியிருப்புப் பகுதியின் அருகாமையில் அமைந்திருப்பதாகவும் பண்ணை அமைப்பதற்கான உரிமத்தைப் பேராக் மாநில அரசு வழங்கியிருப்பதாகவும் இதனால் இஸ்லாமியர்களைப் பேராக் மாநில அரசு அசட்டையாகக் கையாள்வதாகவும் Datuk Idris Ahmad சாடினார். இஸ்லாமியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத ஆட்சியைப் பேராக் மாநில அரசு நடந்துக் கொள்வதாகவும் Datuk Idris Ahmad தெரிவித்தார்.

PAS mendakwa Sungai Bidor tercemar dengan najis babi dari ladang berhampiran, menyebabkan ancaman kepada masyarakat Islam. Datuk Idris Ahmad menyalahkan kerajaan negeri Perak atas kelalaian dan sikap tidak peka terhadap sensitiviti penduduk Islam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *