இஸ்லாத்தையும் அரசியலையும் பிரிக்க முடியாது! பாஸ் கட்சி!

- Sangeetha K Loganathan
- 24 Apr, 2025
ஏப்ரல் 24,
மதம் சார்ந்த விவகாரங்களைத் தேர்தல் பிரச்சாரங்களில் பேசாமல் தீர்வுக் கிடைக்காது என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். மதத்தை முன்னிருத்துவது மட்டுமே பாஸ் கட்சியின் தலையாயக் கொள்கை எனும் போது பாஸ் கட்சியின் பிரச்சாரங்களிலிருந்து இஸ்லாத்தைப் பிரிக்க முடியாது என Tuan Ibrahim Tuan Man குறிப்பிட்டார்.
அரசியல் லாபத்திற்காகப் பாஸ் கட்சி இஸ்லாத்தை ஒருநாளும் பயன்படுத்தியது இல்லை என்றும் இந்த அம்னோவிடமிருந்து இஸ்லாத்தைக் காப்பாற்றவே பாஸ் கட்சி போராடுவதாக Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். அம்னோ இஸ்லாத்தை முன்னிருத்தும் கட்சியாகப் போலித்தனமாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாஸ் கட்சி முழுமையாக இஸ்லாத்தை முன்னிருத்தி அரசியல் செய்து வருவதாக Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.
PAS menegaskan bahawa Islam dan politik tidak boleh dipisahkan. Timbalan Presiden PAS, Tuan Ibrahim Tuan Man menyatakan bahawa parti itu memperjuangkan Islam sepenuhnya dan tidak pernah memanipulasi agama demi kepentingan politik seperti yang dilakukan oleh UMNO.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *