சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 8 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 24 Apr, 2025
ஏப்ரல் 24,
முறையானக் கடப்பிதழ்கள் இல்லாமல் மலேசியாவிற்கு நுழைந்த 8 வெளிநாட்டு ஆடவர்களையும் அவர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்த 2 உள்ளூர் நபர்களையும் சரவாக் மாநிலத் தேசியக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 வெளிநாட்டினர்களும் 40 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சட்டவிரோதமாக Tatau காட்டுப்பகுதி வழியாக மலேசியாவுக்குள் அவர்களை அழைத்து வர தலா RM 2,300 ரிங்கிட்டைப் பெற்றதாக கைது செய்யப்பட்ட உள்ளூர் ஆடவர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Imigresen Sarawak menahan 8 warga Indonesia dan 2 rakyat tempatan kerana memasuki Malaysia secara haram melalui hutan di Tatau. Setiap individu membayar RM2,300 kepada penyeludup. Semua suspek kini ditahan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *