பின்னிருந்து மோதிய வாகனம்! பெண் பலி!

- Sangeetha K Loganathan
- 24 Apr, 2025
ஏப்ரல் 24,
கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் பெண் ஓட்டுநர் உயிரிழந்ததாகப் பெந்தோங் மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். இரவு 10 மணியளவில் காராக் அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் உயிரிழந்தவர் 47 வயது Ong Lee Lee என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
குவாந்தானிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சொன்றுக் கொண்டிருந்த வாகனம் முன்னிருந்த மற்றொரு வாகனத்தை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விபத்துக்குக் காரணமான வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னிருந்து வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த 47 வயது Ong Lee Lee தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாகப் பெந்தோங் மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
Seorang wanita berusia 47 tahun maut selepas keretanya dilanggar dari belakang di Lebuhraya Pantai Timur berhampiran Karak. Kenderaan yang melanggarnya terus memandu tanpa berhenti. Mangsa dikenali sebagai Ong Lee Lee.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *