தவறானத் தகவல்களைப் பரப்பிய இருவரிடம் MCMC விசாரணை!

- Sangeetha K Loganathan
- 08 Apr, 2025
ஏப்ரல் 8,
சமூகவலைத்தலங்களில் 3R தொடர்பானச் சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட இருவரிடம் தகவல் தொடர்பு பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC விசாரணை நடத்தியது. சம்மந்தப்பட்ட இருவரும் சமூக ஆர்வலர்கள் என்றும் அரசியல் கட்சி செல்வாக்குள்ளவர்கள் என்றும் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அவர்களைத் தடுத்து வைத்துள்ளதாக MCMC தெரிவித்துள்ளது.
PUTRA HEIGHTS எரிவாயு குழாய் வெடிப்புக் குறித்து தவறானத் தகவல்களைப் பரப்பியது, பேராக் மாநிலக் கீதம் சீனமொழியில் பாடப்பட்டது, மலாய் தேசத்தில் அந்நியர்களுக்கு இடமில்லை எனும்படியானக் கருத்துகளைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்ததால் அவர்களுக்கு எதிராக 4 குற்றப்பத்திரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இருவரின் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் தொடர்பு பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC தெரிவித்துள்ளது.
MCMC sedang menyiasat dua individu yang menyebarkan maklumat salah di media sosial mengenai isu 3R. Mereka dikatakan membuat kenyataan kontroversial berkaitan dengan letupan saluran gas di Putra Heights dan isu etnik. Kedua-dua individu tersebut ditahan sementara siasatan lanjut dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *