தொழில்சாலையில் 22 வெளிநாட்டினர் கைது! 5 உள்ளூர் நபர்கள் மீது விசாரணை!

top-news

ஏப்ரல் 23,

தேசிய குடிநுழைவுத் துறையினர் மறுசுழற்சி மையத்தில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த 22 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நடமாட்டம் இருப்பதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு Sungai Besi பகுதியில் உள்ள மறுசுழற்சி மையத்தில் சோதனையை மேற்கொண்டதில் இந்தியாவைச் சேர்ந்த 18 வெளிநாட்டினர்களும் 4 Bangladesh ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

சுற்றுலா கடப்பிதழைப் பயன்படுத்தி சம்மந்தப்பட்ட 22 பேரும் வேலை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள 22 பேரும் 18 முதல் 43 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். சட்டவிரோதமாக அவர்களைப் பணியமர்த்திய சம்மந்தப்பட்ட மறுசுழற்சி தொழில்சாலையில் உரிமையாளர் என நம்பப்படும் 5 உள்ளூர் ஆடவர்களையும் குடிநுழைவுத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

Seramai 22 warga asing ditahan dalam serbuan Jabatan Imigresen di sebuah kilang kitar semula di Sungai Besi kerana bekerja secara haram. Lima rakyat tempatan turut disiasat kerana dipercayai menggaji pekerja asing tanpa dokumen sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *