190 கிலோவிற்கு மேல் போதைப் பொருளை விநியோகித்த 2 பாகிஸ்தானியர்களுக்கு சாகும் வரை தூக்கு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். 11 -

ஆறு ஆண்டுகளுக்கு , 191.28 கிலோ கிராம் அபாயகரமான கெத்தாமின் போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக, இரண்டு பாகிஸ்தானிய ஆடவர்களுக்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று சாகும் வரை தூக்குத் தண்டனையை விதித்தது.

இதன் தொடர்பான வழக்கின் இறுதியில், நியாயமான சந்தேகத்தை எழுப்புவதில் தற்காப்புத் தரப்பு தோல்வி கண்ட பிறகு, அப்துல் வஹாப் (வயது 60) மற்றும் முஹமட் ரஃபிக் (வயது 52 ஆகிய இரண்டு பாகிஸ்தானிய ஆடவர்களுக்கு எதிராக நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹமிட் இத்தண்டனையை விதித்தார்.

இவ்வழக்கில் புத்ராஜெயா சுங்கத்துறையைச் சேர்ந்த ஷஸ்வானி ஸவாவி மற்றும் முஹமட் அமின் அஸ்மி ஆகிய இரண்டு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்த வேளையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஏ. வெங்கடேஸ்வரன் மற்றும் ஏ. ராஜி ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர்.

அரசு தரப்பு சார்பில் 19 சாட்சிகளும் தற்காப்பு தரப்பில் ஆறு சாட்சிகளும் இதில் சாட்சியம் அளித்திருந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கிய இவ்வழக்கு விசாரணையில் சாட்சியம் அளித்த இவர்களில் அப்துல் வஹாப்பும் முஹமட் ரஃபிக்கும் அடங்குவர்.

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி மாலை 4.30க்கும் இரவு 10.30க்கும் இடைப்பட்ட நேரத்தில், கோலாலம்பூர், டாங் வாங்கிக்கு அருகிலுள்ள ஜாலான் முன்சி அப்துல்லாவிலும் கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவிலும் உள்ள இரண்டு இடங்களில் முறையே 126,502 கிலோ கிராம் மற்றும் 63.79 கிலோ கிராம் எடைகொண்ட அபாயகரமான கெத்தாமின் போதைப் பொருளை விநியோகித்ததாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 34உடன் சேர்த்து, அதே சட்டத்தின் செக்ஷன் 39பி(2) மற்றும் 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் செக்ஷன் 39பி இன் கீழ் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதே ஆண்டு. அதே தேதியில், அதே இடத்தில் மற்றும் அதே நேரத்தில் 987.6 கிராம் கெத்தாமின் போதைப் பொருளை விநியோகித்ததாக அப்துல் வஹாப் மீது மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.

Dua lelaki Pakistan dijatuhi hukuman gantung sampai mati oleh Mahkamah Tinggi Kuala Lumpur kerana mengedar 191.28kg ketamin pada 2019. Mahkamah mendapati pembelaan gagal menimbulkan keraguan munasabah dalam kes yang bermula sejak 2020 dengan 25 saksi dipanggil.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *