கடன் வாங்கியவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய தைவானியர் உட்பட 2 பேர் கைது!

- Muthu Kumar
- 15 Apr, 2025
ஈப்போ, ஏப்.15-
அண்டை நாட்டைச் சேர்ந்த வட்டி முதலை என்று நம்பப்படும் 1 தைவானியர் உட்பட 2 ஆடவர்களைக் கைது செய்ததில் பேரா மாநிலத்தில் தீயினால் தீங்கிழைத்த 8 சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது.
சம்பந்தப்பட்ட 2 பேரும் கடந்த 4ஆம் தேதி 62 வயதுடைய ஒரு மூதாட்டி இருந்த வீட்டின் முன்புறத்தை பெட்ரோல் குண்டு' வீசி எரித்ததாகக் கூறப்படுகிறது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.இதில் முதலாவதாக 37 வயதுடைய உள்ளூர் ஆடவன் இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சனிக்கிழமை பிடிபட்ட வேளையில், 26 வயதுடைய தைவானிய ஆடவன் அதே நாளில் செமோர் வீடமைப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டான்.
கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது புரோட்டோன் ஈஸ்வரா கார் (1), கைப்பேசிகள் (3), மிரட்டல் குறிப்புத் தாட்கள் (2), பெட்ரோல் நிரம்பிய தொட்டி (1), பெட்ரோல் கொண்ட கனிம நீர் போத்தல் (1). குறிப்பு புத்தகம் ஆகியவற்றைச் சோதனைக் குழுவினர் கைப்பற்றினர்.பேரா மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ், ஈப்போ மற்றும் கம்பார் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் குழுக்கள் இணைந்து கடந்த சனிக்கிழமை நண்பகல் 12.05 மணிக்குச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.
விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இருவரும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிச் சமூக வலைத் தளத்தில் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீயின் மூலம் தீங்கிழைக்கும் செயலைக் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இவர்கள் தொடங்கியிருக்கின்றனர். இதற்கான உத்தரவை முகநூல் வாயிலாக அண்டை நாட்டைச் சேர்ந்த முகவரிடமிருந்து இவர்கள் பெறுவர் என்று பேரா போலீஸ் மூத்த அதிகாரியின் கூட்டத்தில் தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர், சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவருக்கான விருது வழங்கிப் பணி ஒப்படைப்புச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் குறிப்பிட்டார்.
Dua lelaki, termasuk seorang warga Taiwan, ditahan berkaitan lapan kes khianat api di Perak. Mereka disyaki melempar bom petrol ke rumah seorang wanita. Polis merampas barangan bukti dan mendapati perbuatan ini diarahkan melalui media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *