பிரச்சாரங்களில் 3ஆர்; துணைப் பிரதமர் வருத்தம்!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், ஏப். 21-

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலிலும், 3ஆர் எனப்படும் இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் உட்பட உணர்வைத் தூண்டும் முறையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி வருத்தம் தெரிவித்தார்.

பிரச்சாரங்கள் கட்சி, வேட்பாளர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர பிறரைக் குறைத்து மதிப்பிட அல்ல என்று தேசிய முன்னணி தலைவரான அவர் கூறினார். 

இவ்விரு பிரச்சாரங்களும் உச்சகட்டத்தை எட்டுவதைக் நான் காணமுடிகிறது. எனினும் பயன்படுத்தப்படும் பிரச்சார முறை இன்னும் பேசக்கூடாத அம்சங்களையும், தனிப்பட்ட பிரச்சினைகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களாக மாறிவிட்ட பிரச்சினைகள் குறித்தும் இருப்பது மிகவும் அதிருப்தி அளிக்கிறது." என்று அவர் விவரித்தார். நேற்று, பேராக், லெங்கோங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் அஹ்மாட் அவ்வாறு குறிப்பிட்டார்.

Timbalan Perdana Menteri Zahid Hamidi kesal kempen pilihan raya kecil Ayar Kuning guna isu sensitif 3R (kaum, agama, raja). Katanya, kempen patut fokus kelebihan calon dan parti, bukan serangan peribadi atau isu kontroversi yang timbulkan ketegangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *