சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 14 Apr, 2025
ஏப்ரல் 14,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 3 வெளிநாட்டினர்களை எல்லை பாதுகாப்பு சிறப்புப் படையினர் கைது செய்தனர். கிளாந்தானில் KAMPUNG KUBANG KUANG சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்ட போது மூவரிடமும் எந்தவோர் ஆவணங்களும் இல்லாதது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவரும் Bangladesh நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் வாகனமோட்டி 29 வயது உள்ளூர் ஆடவர் என கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் Pasir Mas காவல் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pasukan Gerakan Am (PGA) berjaya menahan sebuah kereta yang mencurigakan di Rantau Panjang, menahan tiga lelaki Bangladesh tanpa dokumen sah, serta pemandu India berusia 29 tahun kerana menyediakan perkhidmatan kepada pendatang tanpa izin.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *