தோக்கியோ பஸ் விபத்தில் 5 மலேசியர்கள் காயம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 7 -

ஜப்பானிய தலைநகர் தோக்கியோவில் சனிக்கிழமை நிகழ்ந்த இரு பஸ்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்த 47 பேரில் ஐந்து மலேசியர்களும் அடங்குவர் என்று. வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்திருப்போரில் பெரும்பாலோர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர்களில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹசியோஜி எனுமிடத்தில் உள்ள சுவோ நெடுஞ்சாலையில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் சிக்கியவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு காயமடையவில்லை என்று. கியோடோ செய்தி நிறுவனம் கூறியது.

ஒரே சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த அந்த இரண்டு பஸ்களிலும் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவானைச் சேர்ந்த பயணிகள் இருந்ததாக கூறப்பட்டது.ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த அவ்விரு பஸ்களில், பின்னால் வந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சுடன் மோதியதாக தோக்கியோ போலீசார் கூறினர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் பிரேக் போட்டதை, பின்னால் வந்து கொண்டிருந்த பஸ் ஓட்டுநர் கவனிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதனால், ஹசியோஜி சாலை சந்திப்புக்கும் சகாமிக்கோ சாலை சந்திப்புக்கும் இடையிலான சாலை அனைத்து போக்குவரத்துக்கும் தற்காலிகமாக மூடப்பட்டது.

Lima rakyat Malaysia cedera dalam kemalangan dua bas pelancong di Hachioji, Tokyo. Bas yang membawa pelancong dari beberapa negara bertembung akibat kesesakan lalu lintas. Tiada kecederaan serius dilaporkan. Jalan terlibat ditutup sementara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *