பாடாங் செராய் தொகுதி பிகேஆர் கட்சித் தேர்தல்:மூன்று வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்!

top-news
FREE WEBSITE AD

(கே. ஆர். மூர்த்தி)

கூலிம். ஏப்.11-

பாடாங் செராய் தொகுதி கட்சித் தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் களத்தில் குதிக்கவுள்ளதாகவும், அவர்கள் மூவரும் வாக்காளர்களின் ஆதரவை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிகேஆர் கட்சியில் இவ்வாண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால் தொகுதி நிலைத்தலைவர். துணைத்தலைவர். உதவித்தலைவர், இளைஞர் பகுதி மற்றும் மகளிர் பகுதி ஆகிய முக்கிய பதவிகளுக்கு போட்டியிட முன்வந்துள்ளனர்.

அந்த வகையில் பாடாங் செராய் தொகுதி மக்கள் நீதிக் கட்சியிலும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. இத்தொகுதியில் அணியாகவும் சிலர் களத்தில் இறங்கவுள்ளனர். சிலர் தனிப்பட்ட முறையில் களத்தில் குதிக்கவுள்ளனர்.பாடாங் செராய் தொகுதியில் இதற்கு முன்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணன், அமரர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் எம். கருப்பையா ஆகியோர் தலைவராக இருந்து வந்தனர்.




அமரர் எம்.கருப்பையாவின் மறைவுக்குப் பிறகு இத்தொகுதியில் துணைத்தலைவராக இருந்து வந்த சம்சூல் அன்வார் அப்துல்லா இன்று வரை தலைவராக இருந்து வருகின்றார்.இப்பொழுது நடைபெறவுள்ள தொகுதி தேர்தலில் தொகுதி இடைக்கால தலைவராக இருக்கும் சம்சூல் அன்வார் அப்துல்லா, பிரேம்நாத் காளிதாசன் என்ற விஜேய் பிரேம் மற்றும் கிருஷ்ணன் மாணிக்கம் என்ற கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாடாங் செராய் தொகுதி துணைத்தலைவர் பதவிக்கு ரம்லி பின் அல்ரானி, க. கோபாலகிருஷ்ணன் என்ற கல்சிவா, பிரகாஷ் . சுப்பிரமணியம், முகமட் மற்றும் சைபூல் ஆகிய ஐவர் போட்டியிடுகின்றனர்.கட்சியின் செயலவை உறுப்பினர்கள் பதவிக்கு ஒவ்வோர் அணியிலும் 15 பேர் வீதம் 45 பேர் களத்தில் இறங்கியுள்ளார்கள். அதே போல் கட்சியில் இளைஞர் பகுதி மற்றும் மகளிர் பதவிகளுக்கு நேரடிப் போட்டி நிலவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரேம்நாத் காளிதாசன் என்ற விஜேய் பிரேம் அணியில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மகன் ஹார்ஹாம் ரஹிம் நாசுத்தியோன் இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது.இத்தொகுதிக்கான வாக்களிப்பு இன்று 11.4.2025 காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணிவரை இணையம் வழி நடைபெறும்.

Tiga calon bertanding jawatan Ketua Cabang PKR Padang Serai dalam pemilihan parti tahun ini. Persaingan sengit melibatkan jawatan ketua, timbalan, pemuda dan wanita. Pengundian secara dalam talian berlangsung hari ini dari jam 8 pagi hingga 5 petang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *