காவடி ஆட்ட சர்ச்சையில் சிக்கிய வானொலி அறிவிப்பாளர்கள் நாளை வேலைக்குத் திரும்புகிறார்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 7: தைப்பூச காவடி சடங்கை கேலி செய்ததற்காக சர்ச்சையைக் கிளப்பிய எரா எஃப்எம் காலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களான ராடின் அமீர் அஃபெண்டி அஹ்மத் அருவானி, ஆசாத் ஜாஸ்மின் மற்றும் நபில் அஹ்மத் ஆகியோர் ஒரு மாதத்திற்குப் பிறகு நாளை மீண்டும் தங்கள் அறிவிப்பாளர் பணியைத் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரும் காலை 6 மணிக்கு தங்கள் அதிகாலைப் பகுதியை மீண்டும் தொடங்குவார்கள் என்று வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் புனிதச் சடங்கான காவடி ஆட்டம் குறித்து கேலியாக  வீடியோ வெளியிட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  பின்னர் அந்த வீடியோ நிலையத்தின் சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் மன்னிப்பு கேட்டு, தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் சம்பந்தப்பட்ட வானொலி நிறுவனத்திற்கு RM250,000 அபராதம் விதித்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குறைந்தது 73 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன!

Tiga penyampai Era FM yang digantung tugas kerana video mempersenda perarakan kavadi Thaipusam akan kembali bertugas esok. Mereka telah memohon maaf atas kesilapan itu. Suruhanjaya Komunikasi dan Multimedia Malaysia (SKMM) mengenakan denda RM250,000 ke atas stesen radio dan 73 laporan polis telah dibuat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *