பேரா மாநில அரசாங்கத்தின் மீது அவதூறு பேசிய ராஜ்மன் ஜக்காரியா வெளியேற்றம்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஈப்போ, ஏப். 23-

பேரா மாநில சட்டமன்ற அவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டம் 588 இன் பிரிவு 211 இன் கீழ் மாநில அரசாங்கத்தையும், ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் அவதூறு மற்றும் மக்களைத் தூண்டிவிடும் அறிக்கைகளை வெளியிட்டுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில பாஸ் கட்சித் தலைவரும். குனோங் செமாங்கோல் சட்டமன்ற உறுப்பினருமான ஹாஜி ராஜ்மான் ஜக்காரியாவை அவைத் தலைவர் 6 மாத காலம் வரை இடைநீக்கம் செய்துள்ளார் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தெலுக் இந்தான் பாசீர் பெர்டாமார் சட்டமன்ற உறுப்பினரும், உள்நாட்டு வாணிப அமலாக்கப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ காஹ் லியோங் மீதும் பல்வேறு ஆதாரமற்ற விடயங்களை முன்வைத்து குற்றம் சாட்டி
சட்டமன்றத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 211ஆவது பிரிவை மீறியதாக வூ காஹ் லியோங் மீது கூறப்படும் குற்றச்சாட்டினை முன்வைப்பதன் மூலம் ராஜ்மான் தாம் செய்துள்ள தவறுகளை மறைக்கவே சட்டத்தைக் காண்பித்து மிரட்டியும் துஷ்பிரயோகம் செய்தும் வருகிறார்.

மற்றவர்களைக் குறித்து உண்மைக்குப் புறம்பாக வஞ்சக நோக்கத்துடன் ராஜ்மானின் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படும் கடுமைக்கு எதிரான தீர்ப்புதான் இந்த இடைநீக்கமாகும் என்று துளசி மனோகரன் விமர்சித்தார்.

உண்மையிலேயே ராஜ்மனுக்கு சட்டப்பூர்வ அடிப்படை இருப்பதாக அவர் நம்பினால், அவரை எந்த தளத்திலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அது சட்டமன்றமாகவோ அல்லது நீதிமன்றமாகவோ இருக்கலாம். இது வெறும் பேச்சல்ல.

இதனை ஒரு சவாலாக விடுக்கின்றேன். அரசியல் நோக்கத்திற்காகவும் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும் ஊடக அறிக்கைகளின் மூலம் உமது மிரட்டல் விளையாட்டினை விளையாட துணியாதீர் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

ADUN pembangkang Perak, Haji Rajman Zakaria digantung enam bulan daripada DUN kerana kenyataan fitnah dan menghasut. ADUN Buntong, Thulasi Manogaran menyatakan hukuman itu wajar kerana Rajman menyalahguna undang-undang untuk menutup kesalahannya dan mencabar Rajman menghadapi isu ini secara sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *