பாலமுருகனை கடந்த ஜனவரியில் இருந்து காணவில்லை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22: ஜனவரி 6 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா,  பிரிவு 19 இல் காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

 பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாருல்நிசாம் ஜாஃபர், ஜனவரி 7 ஆம் தேதி நள்ளிரவு 12.31 மணிக்கு எஸ்.எஸ். பால முருகன் எனும் 57 வயது நபர்  காணாமல் போனது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி இரவு 9.20 மணிக்கு கடைசியாகக் காணப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும்,  வழக்கு குறித்த தகவல் உள்ள பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீ பார்க் காவல் நிலையத்தை 03-7874 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-7966 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் இன்று கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *