சீனாவுக்குத் திரும்பும் மலேசியாவின் செல்ல பாண்டாக்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 19: மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு கடனாக வழங்கப்பட்ட இரண்டு ராட்சத பாண்டாக்களான ஃபூ வா மற்றும் ஃபெங் யி, இருவரும் அடுத்த மாதம் சீனாவுக்குத் திரும்பும் என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்  அமைச்சு தெரிவித்துள்ளது.

 சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மலேசியா வருகையின் போது சீனாவுடன் கையெழுத்திடப்பட்ட ராட்சத பாண்டா பாதுகாப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு குறித்த புதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆண்டு காலத்திற்கான புதிய ஜோடி பாண்டாக்களை மலேசியா பெறும்.

ஃபூ வா மற்றும் ஃபெங் யி இருவரும் திருப்பி அனுப்பப்படுவதற்கான முயற்சியில் நேற்று முதல் பாண்டா பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது!

Dua panda gergasi, Fu Wa dan Feng Yi, yang dipinjamkan kepada Malaysia sejak 2014, akan dikembalikan ke China bulan depan. Malaysia dijangka menerima sepasang panda baharu Ogos ini susulan perjanjian kerjasama baharu dengan China.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *