கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை விடுத்த MET MALAYSIA!

- Sangeetha K Loganathan
- 08 Apr, 2025
ஏப்ரல் 8,
மலாக்காவில் உள்ள கடற்பரப்பில் பலத்த புயல் வீசும் அபாயம் இருப்பதால் கடல் கொந்தளிப்பு எச்சரிக்கையைத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA விடுத்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் திகதியும் ஏப்ரல் 12 ஆம் திகதியும் மலாக்கா கடற்பரப்பில் இந்த கொந்தளிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக MET MALAYSIA தெரிவித்துள்ளது.
மலாக்காவில் உள்ள Phuket கடல் பகுதியும் வடக்கு மலாக்கா கடல் பகுதியும் இந்த கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்படும் என்றும் சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலானப் புயல் 3.5 மீட்டருக்கும் மேல் வீசும் என MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 10 ஏப்ரல் முதல் 13 ஏப்ரல் வரையில் கடல் நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படியும் மீனவர்களின் படகுகளைக் கரையில் பாதுகாப்பானப் பகுதியில் வைக்கும்படியும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
MET Malaysia mengeluarkan amaran laut bergelora di perairan Melaka antara 11 hingga 12 April disebabkan ribut kuat dengan kelajuan angin 40–50 km/j dan ombak melebihi 3.5 meter. Aktiviti laut dan pergerakan bot dinasihatkan dihentikan sementara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *