தமிழ் மலர் செய்தி எதிரொலி- பந்திங் பேருந்து நிலைய பயணிகளுக்கு புதிய கூடாரம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், ஏப்.17-

அண்மையில் இவ்வட்டாரத்தில் வீசிய பலத்த புயல் காற்றின்' காரணமாக சேதமுற்ற பந்திங் பேருந்து நிலைய பயணிகள் அமரும் கூடாரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அதற்கு மாற்றாக புதிய கூடாரத்தை அதே இடத்தில் நிலை நிறுத்தும் பணிகள் நேற்று காலையில் வெற்றிகரமாகப் பூர்த்தி பெற்றது.

நேற்றைய (16.4.2025) தமிழ் மலரில் பக்கம் நான்கில், புயல் காற்றில் பலத்த சேதமுற்ற பயணிகள் அமரும் பேருந்து கூடாரத்திற்கு எப்போது விடிவு காலம்? என்ற தலைப்பில் செய்தி பிரசுரமானது.இந்த ச் சம்பவம் மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. அவரும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

பேருந்து நிலையக் கூடாரம் சேதமுற்றதால் மழை வெயில் காலங்களில் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவர் என்று அரசு சாரா அமைப்புகளின் தலைவர்களும் குரல் எழுப்பினர்.இந்த நிலையில் கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலத்தில் அமையப் பெற்ற வவாசான் சுத்ரா பேருந்து நிலையமும் அதை ஒட்டி போடப்பட்டிருந்த பயணிகள் கூடாரமும் ஏதேனும் சேதமுற்றால் அதற்கு பேருந்து நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேருந்து நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த குத்தகைப் பணியாளர்கள் நேற்று காலை 9 மணியளவில் புயல் காற்றில் சேதமுற்ற கூடாரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கூடாரத்தை அதே இடத்தில் நிலை
நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.புதிய கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதால் அதில் அமர்ந்திருந்த பயணிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் பன்னீர் செல்வம் புதிய கூடாரம் அமைக்கப் பட்டதை நேரில் வந்து பார்வையிட்டார்.

வவாசான் சுத்ரா பேருந்து நிறுவன நடவடிக்கை அதிகாரி கணேசன் புதிய கூடாரம் அமைக்க 1,100 ரிங்கிட் செலவிடப் பட்டதாகத் தெரிவித்தார்.தமிழ் மலர் செய்தி எதிரொலி காரணமாக பேருந்து நிறுவனம் நகராண்மைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் புதிய கூடாரத்தை விரைவாக அமைத்து தந்ததற்கு வழி காட்டியாக இருந்த தமிழ்மலர் செய்தியாளருக்கும் அவரது பத்திரிகை நிறுவனத்திற்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக மஇகா ஜூக்ரா கிளைத் தலைவர் ஜி.குமார் கூறினார்.

Di Banting, setelah kesan kerosakan akibat angin ribut, tempat menunggu penumpang di stesen bas telah dipindahkan dan digantikan dengan tempat baru. Pihak berkuasa tempatan dan syarikat bas bertanggungjawab dalam tindakan ini, dengan kos sebanyak RM1,100.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *