‘சங்க கால வாழ்வியலும், தற்கால நடைமுறையும்’ - முனைவர் அமுதா பாண்டியனின் வாழ்வியல் பேருரை

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஏப்ரல் 23: இயல் இசை நாடக மன்றத்தின் ஏற்பாட்டில் சங்க கால வாழ்வியலும், தற்கால நடைமுறையும் எனும் தலைப்பில் பேச்சாளர் முனைவர் அமுதா பாண்டியன் நாளை  ஏப்ரல் 24 ஆம் தேதி, வியாழக்கிழமை, கிள்ளானில் No. 5, Lorong Seruling 58, Taman Klang Jaya, 41200 என்ற முகவரியில் அமைந்துள்ள  ஓம்ஸ் அறவாரியத்தின் அலுவலக அரங்கில்  வாழ்வியல் பேருரை வழங்கவிருக்கிறார்.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக ஓய்வு பெற்ற நிறைநிலைப் பேராசிரியரான   அமுதா பாண்டியன் தமிழிசை அறிஞர் ஆப்ரகாம் பண்டிதர் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இசை, மருத்துவம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கியவர் ஆப்ரகாம் பண்டிதர். இசை குறித்த அவரது ஆய்வுப் புத்தகம் இசைக்கலைஞர்களின் வேதமாகவே பார்க்கப்படுகிறது.

அத்தகைய போற்றுதற்குரிய தமிழ்ச் சான்றோர் வரிசையில் இன்றும் அழியாப் புகழோடு விளங்கும் ஆப்ரகாம் பண்டிதரின் பேத்தி அமுதா பாண்டியனின் வாழ்வியல் பேருரையை, நேரில் வந்து கண்டுணர அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

தேநீர் உபசரிப்புடன் மலை 6.30 மணிக்கு வருகையாளர்களின் பதிவோடு தொடங்கும் இந்நிகழ்வு, இரவு 8.45 மணி வரை நடைபெறும்.

சிறப்பு அங்கமாகக் கேள்விப் பதில் அங்கமும் இடம்பெறுகிறது என்பதால் வாழ்வியல் விளக்கங்களைப் பெற்று மகிழலாம்.

இயல் இசை நாடகமன்றம் தொடர்ந்து தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மக்களுக்காக ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து, விதவிதமான நிகழ்ச்சிகளின் வழி  தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.

அந்த வகையில் இம்முறையும் வித்தியாசமான தலைப்போடு சங்க கால வாழ்வியலும், தற்கால நடைமுறையும் குறித்து வாழ்வியல் பேருரையை வழங்க முனைவர் அமுதா பாண்டியனை அழைத்து வந்திருக்கின்றனர் இயல் இசை நாடகமன்றத்தினர்!

Dr. Amutha Pandian akan menyampaikan syarahan bertajuk "Sangam Era dan Amalan Moden" pada 24 April di Klang. Beliau ialah cucu kepada sarjana muzik Abraham Pandithar. Acara anjuran Iyal Isai Nadaga Manram ini diadakan di pejabat OHMS, bermula jam 6.30 petang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *