உதவவில்லை என்றால் வாயை மூடுங்கள்! - ANTHONY LOKE ஆவேசம்!

- Sangeetha K Loganathan
- 10 Apr, 2025
ஏப்ரல் 10,
PUTRA HEIGHTS எரிவாயு குழாய் வெடி சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பாதவர்கள், வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு போக்குவரத்து அமைச்சரும், DAP பொதுச் செயலாளருமான ANTHONY LOKE வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் DAP முன்னெடுத்த நிதி வசூலிப்புத் திட்டத்தைக் கேவலப்படுத்தும் தரப்பினர்களுக்கு எதிராக ANTHONY LOKE தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட நாள் முதல் டி.ஏ.பி கட்சியினர் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியும் என்பதை ஆராய்ந்து உதவி செய்து வருகிறோம். ஆனால், எந்த உதவியும் செய்யாதவர்கள், வெறும் வாய் சவடால் வழி தங்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருப்பதைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், அரசியல் வெறுப்புகளுக்காக டி.ஏ.பி கட்சியின் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்துவதாகவும் ANTHONY LOKE தெரிவித்தார். இது போன்றவர்களின் வாய்கள் மூடப்பட்டால் விரைந்து உதவிகளைச் செயல்படுத்த முடியும் என்று ANTHONY LOKE தெரிவித்தார்.
Anthony Loke menggesa pihak yang tidak membantu mangsa letupan gas di Putra Heights supaya berdiam diri. Beliau mempertahankan inisiatif kutipan dana oleh DAP dan mengecam mereka yang memperlekehkan usaha itu atas dasar kebencian politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *